×

இன்று முதல் பெங்களூரில் பெண்கள் ஐபிஎல் டி20 தொடக்கம்

பெங்களூர்: பெண்கள் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது தொடர் இன்று பெங்களூரில் தொடங்க உள்ளது. ஆண்களுக்கான ஐபிஎல் தொடரைப் போன்று பெண்களுக்கான டி20 கிரிக்கெட் தொடரான பெண்கள் ஐபிஎல்(டபிள்யூஐபிஎல்) கடந்த ஆண்டு தொடங்கியது. இப்போட்டியில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோதும். முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும். மேலும் 2, 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் ஆடும்.

அதில் வெற்றிப் பெறும் அணி இறுதி ஆட்டத்தில் களம் காணும். நடப்புத் தொடருக்கான ஆட்டங்கள் இன்று முதல் மார்ச் 17ம் தேதி வரை பெங்களூர் மற்றும் டெல்லியில் நடைபெறும். இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோத உள்ளன. ஆட்டங்கள் தினமும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.

இந்தியாவின் முன்னணி வீராங்கனைகள் மட்டுமின்றி , இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என வெளிநாட்டு வீராங்கனைகளும் இந்த தொடரில் விளையாடுகின்றனர். நம்மவூரு வீராங்கனைகள்: தமிழ்நாட்டைச் சேர்ந்த வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹேமலதா தயாளன் ஆகியோர் குஜராத் அணிக்காவும், கீர்த்தனா பாலகிருஷ்ணன் மட்டும் மும்பை அணிக்காகவும் விளையாடுகின்றனர்.

* களம் காணும் அணிகளும், கேப்டன்களும்

அணி கேப்டன்
டெல்லி கேபிடல்ஸ் ஆலீஸ் கேப்சி(இங்கிலாந்து)
குஜராத் ஜெயன்ட்ஸ் பெத் மூனி(ஆஸ்திரேலியா)
மும்பை இந்தியன்ஸ் ஹர்மன்பிரீத் கவுர்(இந்தியா)
ராயல் சேலஞ்ச்ர்ஸ் பெங்களூர் ஸ்மிரிதி மந்தானா(இந்தியா)
யுபி வாரியர்ஸ் அலிஸ்சா ஹீலே(ஆஸ்திரேலியா)

The post இன்று முதல் பெங்களூரில் பெண்கள் ஐபிஎல் டி20 தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Women's IPL T20 ,Bangalore ,Women's IPL T20 cricket ,Women's IPL ,WIPL ,women's T20 cricket series ,IPL ,Dinakaran ,
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...