×

ரூ.1179 கோடியில் 2026 வரை பெண்கள் பாதுகாப்பு திட்டம்

புதுடெல்லி: நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வரும் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தை 2025-25ம் ஆண்டு வரை செயல்படுத்துவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது.அதில், 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் ரூ.1179.72 கோடி செலவில் ‘பெண்களின் பாதுகாப்பு’ என்ற ஒருங்கிணைந்த திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்கான உள்துறை அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மொத்த திட்ட ஒதுக்கீடான ரூ.1179.72 கோடியில், ரூ.885.49 கோடியை உள்துறை அமைச்சகம் தனது சொந்த நிதியிலிருந்தும், ரூ.294.23 கோடியை நிர்பயா நிதியிலிருந்தும் வழங்கும் என அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்,‘‘ பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளை அறிவியல் பூர்வமாகவும்,சரியான நேரத்தில் விசாரிக்கவும் புனே, சண்டிகர், கொல்கத்தா, டெல்லி, காம்ரூப் மற்றும் போபால் ஆகிய இடங்களில் 6 சைபர் தடய அறிவியல் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும்’’ என்றார்.

The post ரூ.1179 கோடியில் 2026 வரை பெண்கள் பாதுகாப்பு திட்டம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union Government ,Union Cabinet ,Modi ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை