×

கர்நாடகாவுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி இழப்பு சட்டப் பேரவையில் ஒன்றிய அரசை கண்டித்து தீர்மானம்: தீர்மான நகலை கிழித்து எறிந்து பாஜ போராட்டம்

பெங்களூரு: கர்நாடக பேரவையில் நேற்று சட்டம் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்கே பாட்டீல், ஒன்றிய பாஜ அரசு கர்நாடக மாநிலத்திற்கு நிதி ஒதுக்கியதில் பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறது என கூறி கடந்த 2017-18 முதல் தற்போது வரையிலான காலக்கட்டத்தில் நிதி கமிஷன் மாநிலத்திற்கு அளித்த நிதியை எடுத்துக்கூறி இன்று வரை ரூ.1 லட்சத்து 78 ஆயிரத்து 189 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த கர்நாடக மக்களை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது. கன்னட மக்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளும் இதை ஆதரிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ உறுப்பினர்கள் அவையில் போராட்டம் நடத்தினர் அமைச்சரின் வேண்டுகோளை பாஜவினர் ஏற்காத நிலையில் சபாநாயகர் யுடி காதர், குரல் வாக்கெடுப்பு நடத்தி தீர்மானம் நிறைவேறியதாக அறிவித்தார்.

The post கர்நாடகாவுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி இழப்பு சட்டப் பேரவையில் ஒன்றிய அரசை கண்டித்து தீர்மானம்: தீர்மான நகலை கிழித்து எறிந்து பாஜ போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Legislative ,Assembly ,BJP ,Bengaluru ,Karnataka Assembly ,Law ,and Parliamentary ,Affairs Minister ,HK Patil ,Union BJP government ,Karnataka ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில்...