×

ஒன்றிய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் ஆளுநராக கடந்த 2018ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் சத்யபால் மாலிக். இவ் ஒன்றிய அரசுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். 2019-ம் ஆண்டு புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம் குறித்து சத்யபால் தெரிவித்த கருத்துகள் ஒன்றிய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. சத்யபால் மாலிக் ஆளுநராக பதவி வகித்த போது கிரு நீர்மின்சார திட்டம் செயல்படுத்தப்பட்டது.

செனாப் ஆற்றின் குறுக்கே கிஸ்த்வார் மாவட்டத்தில் 624 மெகாவாட் கிரு நீர்மின்சாரத் திட்டத்தை மேற்கொள்ள லஞ்சம் கொடுக்கப்பட்டது என குற்றம் சாட்டப்பட்டது. இந்த திட்டத்தில் சத்யபால் மாலிக் லஞ்சம் பெற்றிருக்கலாம் என்று புகார் எழுந்ததை தொடர்ந்து டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள எட்டு இடங்களில் கடந்த மாதம் சிபிஐ அதிாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் தொடர்ச்சியாக சத்யபால் மாலிக்கின் டெல்லி வீடு உட்பட அவருக்கு தொடர்புடைய 29 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

சோதனை தொடர்பாக பேசிய சிபிஐ அதிகாரி, “ ரூ.2,200 கோடி கிரு நீர் மின்சார திட்ட பணிகளுக்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார். இதுகுறித்து சத்யபால் மாலிக் டிவிட்டரில் பதிவிடுகையில், கடந்த 4 நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறேன்.

எனது வீட்டை விசாரணை அமைப்புகளின் மூலம் சர்வாதிகாரி சோதனை நடத்துகிறார். நான் ஒரு விவசாயி மகன். இந்த சோதனைகளுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன் என தெரிவித்துள்ளார். சத்ய பால் மாலிக் ஆளுநராக இருந்த சமயத்தில் நீர் மின் திட்டம் உள்பட இரண்டு கோப்புகளில் கையெழுத்து பெறுவதற்காக தனக்கு ரூ.300 கோடி வரை லஞ்சம் தர முயன்றனர் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.

The post ஒன்றிய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Tags : CBI ,Governor ,Satya Pal Malik ,Union Government ,New Delhi ,Jammu ,Kashmir ,Pulwama terror attack ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...