×

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 17வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியீடு!!

மும்பை: மார்ச் 22ம் தேதி தொடங்க உள்ள 2024ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் 15 நாட்களுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொடர்களில் ஒன்றான ஐபிஎல் தொடர் மார்ச் 22ம் தேதி தொடங்க உள்ளதாக அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 17வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மே மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் முதல் 21 போட்டிகளுக்கான கால அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறுகின்றன.

17வது சீசனுக்கான போட்டி அட்டவணையில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியும், 16 சீசனாக சாம்பியனாக துடிக்கும் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இரு பெரும் ஜாம்பவான்களாகிய கோலி, தோனி ஆகிய இருவரும் முதல் போட்டியிலேயே மோத உள்ளதால் ரசிகர்களிடையே இப்போதே நெருப்பு பற்றிக்கொண்டது.

வெளியிடப்பட்ட அட்டவணையின் அடிப்படையில் முதல் போட்டியில் சென்னை – பெங்களூரு அணிகள் மார்ச் 22ம் தேதியும், ஏப்ரல் 7ம் தேதி குஜராத் – லக்னோ அணிகளும் மோதுகின்றன.

The post ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 17வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியீடு!! appeared first on Dinakaran.

Tags : IPL 17th ,Mumbai ,IPL ,Dinakaran ,
× RELATED மும்பை – ஆர்சிபி இன்று பலப்பரீட்சை: 2வது வெற்றி யாருக்கு