×

விபத்தில் வெளிநாட்டு நிறுவன மேற்பார்வையாளர் இறப்பு: ரூ.1.20 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

கடலூர்: கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலியான சிங்கப்பூர் நிறுவன மேற்பார்வையாளர் குடும்பத்திற்கு ரூபாய் 1.20 கோடி இழப்பீடு வழங்க கடலூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், விருப்பாட்சி அடுத்த தொப்பையாங்குப்பம் பகுதியில் வசித்து வந்த வெள்ளக்கண்ணு மகன் இளங்கோவன்(39). சிங்கபூரில் உள்ள சர்வதேச நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த 28/ 7 /2020 அன்று கடலூர்- விருத்தாச்சலம் மெயின் ரோடு பெரிய தோப்பு கொள்ளை பகுதியில் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறிய கார் விபத்துக்குள்ளானதில் இதில் பயணம் செய்த இளங்கோவன் பலியானார். இதைத் தொடர்ந்து இறந்த இளங்கோவன் மனைவி அம்மு, மகள் அனுஷ்கா, மகன் அதிலேஷ், தாயார் செல்வாம்பால்

ஆகியோர் கடலூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் என் 1ல் நஷ்ட ஈடு கோரி வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், உஷாராணி ,கலையரசன் மூலம் மனு தாக்கல் செய்தனர் . மனுவை விசாரித்த மாவட்ட சிறப்பு நீதிபதி ஆனந்தன் விபத்தில் இறந்த இளங்கோ குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூ.88,06,000/-ம் அதற்கான வட்டியுடன் சேர்த்து சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.1,20,00,000-ம் (ரூபாய் ஒரு கோடி இருபது லட்சத்தை) நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட்டார்.

The post விபத்தில் வெளிநாட்டு நிறுவன மேற்பார்வையாளர் இறப்பு: ரூ.1.20 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Singapore ,Ilangovan ,Vellakannu ,Toppayanguppam ,Cuddalore district ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை