×

வெந்தய ஊறுகாய்

தேவையானவை:

முளைவிட்ட வெந்தயம் – 50 கிராம்,
பச்சை மிளகாய் – 6 (நறுக்கியது),
எலுமிச்சம் பழம் – 1,
எலுமிச்சம் பழத்தின் சாறு – 2 பழம்,
கல்உப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் பொடி – சிட்டிகை,
நாட்டுச்சர்க்கரை – ½ டீஸ்பூன்.

தாளிக்க:

நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
கடுகு – ½ டீஸ்பூன்,
பெருங்காயப் பொடி – ½ டீஸ்பூன்.

செய்முறை:

முளைவிட்ட வெந்தயத்தை சிறிதும் நீரின்றி நன்கு வடித்து துணி கொண்டு ஈரம் போக துடைக்கவும். வெறும் வாணலியில் கல் உப்பு வறுத்து பொடிக்கவும். ஒரு ஜாடி (அ) கண்ணாடி கிண்ணத்தில் வெந்தயம், நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு, நறுக்கிய எலுமிச்சை மற்றும் எலுமிச்சம் சாறு பிழிந்து நன்கு கலந்து, மஞ்சள் பொடி, நாட்டுச் சர்க்கரை சேர்த்து பிசறி சூடான எண்ணெயில் தாளிதம் செய்து நன்கு கலந்து பரிமாறவும்.(தாய்மை அடைந்த பெண்களுக்கு வரும் வாந்திக்கு மேற்கண்ட ஊறுகாய் சிறிது மென்று சாப்பிட வாந்தி, வாய் கசப்பு கட்டுப்படும்).

The post வெந்தய ஊறுகாய் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...