×

தலையணையால் முகத்தை அழுத்தி பெண்ணை கொன்று நகை திருட்டு: தம்பதி கைது

சத்தியமங்கலம்: தலையணையால் முகத்தை அழுத்தி பெண்ணை கொன்று நகை திருடிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தர் யசோதா (64). இவரது மகள்கள், மகனுக்கு திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர். யசோதா வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், காலையில் நீண்ட நேரம் ஆகியும் யசோதா வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் காமராஜ் என்பவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது யசோதா இறந்து கிடந்தார்.

தகவலறிந்து இதுகுறித்து அவர்களது மகன் மற்றும் மகள்கள் விரைந்து வந்து பார்த்தனர். யசோதாவின் கழுத்தில் போடப்பட்டிருந்த இரண்டரை பவுன் தங்க செயின் மற்றும் கழுத்தில் போட்டிருந்த அரை பவுன் கம்மலுக்கு பதிலாக கவரிங் நகையாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால், நகைக்காக யசோதாவை கொலை செய்திருக்கலாம் என பவானிசாகர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

அதில், யசோதாவின் வீட்டிற்கு எதிர் வீட்டில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு குடி வந்த பழனிச்சாமி (37), அவரது மனைவி தேவி (30) இருவரும் சேர்ந்து யசோதாவை கொலை செய்து நகையை கழற்றிக்கொண்டு கவரிங் நகை போட்டது தெரியவந்தது. இதையடுத்து பவானிசாகரில் பதுங்கி இருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். பழனிச்சாமி கடன் பிரச்னையில் தவிர்த்து வந்துள்ளார். இதனால் பழனிச்சாமியும், தேவியும் சேர்ந்து எதிர் வீட்டில் தனியாக வசித்து வந்த யசோதாவின் கழுத்தில் இருந்த தங்க நகையை கொள்ளையடித்து விற்று கடன் பிரச்னையை தீர்க்கலாம் என முடிவு செய்துள்னர்.

அதன்படி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த யசோதாவை இருவரும் சேர்ந்து தலையணையால் முகத்தை அழுத்தி மூச்சு திணற வைத்து கொலை செய்துள்ளனர். பின்னர் யசோதா கழுத்தில் இருந்த தங்க செயின் மற்றும் காதில் இருந்த கம்மல் ஆகியவற்றை கழற்றிக்கொண்டு அதேபோல் வாங்கி வைத்திருந்த கவரிங் நகையை அணிவித்து தப்பியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

The post தலையணையால் முகத்தை அழுத்தி பெண்ணை கொன்று நகை திருட்டு: தம்பதி கைது appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Yashoda ,Thottampalayam village ,Bhavanisagar ,Erode district ,Yashoda… ,
× RELATED பண்ணாரி வனப்பகுதியில் உடல்நலம்...