×

அரூர் அருகே மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி பயணியை இறக்கிவிட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்கு..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் செய்யப்பட்டுள்ளது. அரூர் அடுத்த நவலை கிராமத்தைச் சேர்ந்த பாஞ்சாலை. அவர் மாட்டிறைச்சி வாங்கி தனது கிராமத்துக்கு செல்ல அரசுப் பேருந்தில் ஏறினார். பஞ்சாலையிடம் பயணச்சீட்டு வழங்க வந்த நடத்துநர் ரகு என்பவர் அவரது கிராம பெயரை ஏளனமாக சுட்டிக்காட்டி மாட்டிறைச்சி வைத்துள்ளாயா என கேட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக பேருந்தில் இருந்து இறங்குமாறு வற்புறுத்திய போது அடுத்து பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடுங்கள் என்று அந்த பெண் கெஞ்சியதாக தெரிகிறது.

ஆனால், மாட்டிறைச்சி வைத்துக்கொண்டு பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என கூறிய நடத்துநர் வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டு சென்றதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து நடத்துநர் ரகு, ஓட்டுநர் சசிகுமார் பணியிடை நீக்கம் செய்யபட்டனர். இந்நிலையில், பேருந்து ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு ஆகியோர் மீது அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மூதாட்டி அளித்த புகாரில் ஓட்டுநர், நடத்துநர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post அரூர் அருகே மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி பயணியை இறக்கிவிட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Aroor ,Dharmapuri ,Dharmapuri district ,Arur ,Navalai ,Panchalai ,Raghu ,Dinakaran ,
× RELATED அரூரில் 19ம்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு