×

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் நெல் விளைச்சல் குறைவு: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அரிசி விலை கிடுகிடு உயர்வு

சென்னை: தமிழ்நாட்டில் டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரிசி விலை மீண்டும் உயர்வை கண்டுள்ளது. கர்நாடகா மற்றும் ஆந்திராவில் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் அரிசி விலை உயர்ந்துள்ளது. டெல்ட்டாவிலும் விளைச்சல் குறைந்துள்ளதால் அரிசி விலை அதிகரித்துள்ளதாக கூறிய வணிகர்கள் இந்த ஆண்டு முழுவதும் அரிசி விலை குறைய வாய்ப்பு இல்லை என்றனர். கடந்த 4 மாதங்களில் படிப்படியாக இட்லி அரிசி கிலோ 1க்கு ரூ.10, சன்னரக சாப்பாடு அரிசி கிலோ 1க்கு ரூ.12 முதல் ரூ.14 வரை உயர்ந்து விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் கடந்த 4 மாதங்களில் 26 கிலோ கொண்ட அரிசி விலை ரூ.300லிருந்து ரூ.500வரை உயர்ந்துள்ளதாக கூறும் நடுத்தர மக்கள் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர். மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளுர் மாவட்டத்தில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அரிசியின் விலை கிலோ 5 முதல் 10 ரூபாய் வரையிலும் 26 கிலோ அரிசி சிப்பம் 300 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது.

The post ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் நெல் விளைச்சல் குறைவு: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அரிசி விலை கிடுகிடு உயர்வு appeared first on Dinakaran.

Tags : Andhra, Karnataka ,Tamil Nadu ,CHENNAI ,Delta ,Karnataka ,Andhra Pradesh ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...