×

திருவண்ணாமலை அருகே டிராக்டர் மீது கார் மோதி விபத்து: காரில் பயணித்த நான்கு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு

திருவண்ணாமலை: மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே முன்னாள் சென்ற டிராக்டர் மீது வேகமாக வந்த கார் மோதிய விபத்தில் சகோதரியின் திருமணத்திற்கு நண்பர்களுடன் சென்ற சகோதரன் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் அவளூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் திருவண்ணாமலையில் மருந்து கடையில் பணியாற்றி வந்தார்.

அவளூர் பேட்டையில் தனது சகோதரி சரண்யாவின் திருமணத்திற்காக நண்பர்களை ஏற்றி கொண்டு காரில் சென்றுகொண்டிருந்தார். சோப்புத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற டிராக்டர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த பாண்டியன், அழகன், சிரஞ்சீவி ஆகிய 3 பேரும் நிகழ்விடத்திலேயே உடல் நெசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த பிரகாஷ் ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விபத்தில் டிராக்டர் ஓட்டுநர் பூங்காவனத்திற்கு கால் முறிவு ஏற்பட்டதால். திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

 

The post திருவண்ணாமலை அருகே டிராக்டர் மீது கார் மோதி விபத்து: காரில் பயணித்த நான்கு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Thiruvannamalai ,Kilipennathur ,Pandian ,Alavur ,Villupuram district ,
× RELATED திருவண்ணாமலையில் நடந்த சாலை...