×

அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகை திரிஷா நோட்டீஸ்..!!

சென்னை: அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகை திரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். இதையடுத்து கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த நடிகை த்ரிஷா, இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். மேலும், ஏ.வி.ராஜுவின் இந்த பேச்சு கடுமையான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும் இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், தன்னைப்பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி திரிஷா அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில், 24 மணிநேரத்துக்குள் ஏ.வி.ராஜு முன்னணி செய்தி நிறுவனங்கள் வாயிலாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் யூடியூப் சேனல்கள் மூலம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே வெளியான அவதூறு வீடியோக்களை அனைத்து தளங்களில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நடிகை திரிஷா நோட்டீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,AV ,Raju ,Trisha ,Chennai ,A.V. ,
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…