×

கரும்பு கொள்முதல் விலையை ரூ.340ஆக உயர்த்திய ஒன்றிய அரசுக்கு அண்ணாமலை நன்றி

சென்னை: கரும்பு கொள்முதல் விலையை ரூ.340ஆக உயர்த்திய ஒன்றிய அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். கரும்பு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.315ல் இருந்து ரூ.340 ஆக உயர்த்தி வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை; ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், கரும்பு கொள்முதல் விலையை, குவிண்டாலுக்கு ரூ. 315 லிருந்து, ரூ.340 ஆக உயர்த்தி அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு, தமிழக கரும்பு விவசாயிகள் சார்பிலும், தமிழ்நாடு பாஜக சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்ந்து பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, விவசாயிகளின் நலன் காக்கும் உற்ற நண்பனாக நமது ஒன்றிய அரசு விளங்கிக் கொண்டிருப்பதில், மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.400 ஆக உயர்த்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

The post கரும்பு கொள்முதல் விலையை ரூ.340ஆக உயர்த்திய ஒன்றிய அரசுக்கு அண்ணாமலை நன்றி appeared first on Dinakaran.

Tags : Annamala ,Union Government ,Chennai ,BJP ,president ,Annamalai ,Modi ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த...