×

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகிறார்

டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்று சென்னை வருகிறார். தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருடன் தேர்தல் ஆணையர்கள் 3 பேரும் இன்று சென்னை வருகிறார். தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் இன்று இரவு சென்னை வருகின்றனர். நாளை காலை அனைத்துக்கட்சி தலைவர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாடு தலைமைச் செயலாளர், டி.ஜி.பி.யுடன் நாளை மறுநாள் பிற்பகலில் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் நாளை மறுநாள் ஆலோசனை நடைபெற உள்ளது.

The post இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகிறார் appeared first on Dinakaran.

Tags : Chief Election Commissioner of ,India ,Chennai ,Delhi ,Rajiv Kumar ,Chief Election Commissioner ,Chief Electoral Commissioner ,
× RELATED குறைந்த வாக்குப்பதிவு நடைபெறும்...