×

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே டிராக்டர் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே முன்னாள் சென்ற டிராக்டர் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். திருமணத்துக்காக ஆந்திர பதிவெண் கொண்ட காரில் வந்த 4 பேர் விபத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்கள், பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதிகாலையில் நடந்த விபத்து தொடர்பாக கீழ்பென்னாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே டிராக்டர் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kilipennathur ,Tiruvannamalai district ,Thiruvannamalai ,Andhra ,
× RELATED திருவண்ணாமலையில் நடந்த சாலை...