×

சாத்தான்குளம் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா

சாத்தான்குளம், பிப். 22: சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்த்துறைத் தலைவர் பூங்கொடி வரவேற்றார். கல்லூரி முதல்வர் கலைவாணி தலைமை வகித்தார். பாளை. சதக்கத்துல்லா கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் தலைவர் ராமையா கலந்து கொண்டு உலக மொழிகளில் தமிழ் மொழியின் சிறப்பு எத்தகையது என்பது குறித்து எடுத்துரைத்தார். நிகழ்ச்சியை தமிழ்த்துறை பேராசிரியை மெல்பா தொகுத்து வழங்கினார். பேராசிரியை சீதாலெட்சுமி நன்றி கூறினார்.

The post சாத்தான்குளம் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா appeared first on Dinakaran.

Tags : World Mother Language Day ,Satankulam College ,Satankulam ,Satankulam Government College of Arts and Science for Women ,Poongodi ,Principal ,Kalaivani ,Palai ,Ramaiah ,Satakatullah College Tamil Department ,World Mother Language Day Celebration ,Chatankulam College ,
× RELATED சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் தீ விபத்து