×

இல்லம் தேடி கல்வி மையத்தில் ஆய்வு

ஆத்தூர், பிப்.22: பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், தன்னார்வலர்களை கொண்டு, இல்லம் தேடி கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மத்தூரில் செயல்பட்டு வரும் இல்லம் தேடி மையத்தில், நேற்று வட்டார கல்வி அலுவலர் கலாவதி ஆய்வு செய்தார். இந்த மையங்களில், ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ராஜ் தலைமையில், உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு, தாய் மொழியின் முக்கியத்துவம், தாய்மொழியில் கற்பதால் ஏற்படும் நன்மைகள், செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழின் சிறப்புகள் குறித்து, மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் மணியன் நன்றி கூறினார்.

The post இல்லம் தேடி கல்வி மையத்தில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Home Search Education Center ,Athur ,Pethanayakkanpalayam ,District Education Officer ,Kalawati ,Home Search Center ,Mathur ,Joseph… ,
× RELATED கந்தர்வகோட்டை அருகே குரும்பூண்டி...