×
Saravana Stores

அரசு திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு நிலம் அளவீடு செய்ய விண்ணப்பிக்க புதிய இணைய தளம் அறிமுகம் பொதுமக்கள் பயனடைய அழைப்பு

புதுக்கோட்டை: நிலம் அளவீடு செய்ய விண்ணப்பிக்க புதிய இணைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை < https://tamilnilam.tn.gov.in/citizen > என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதில் நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்மந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் < https://tamilnilam.tn.gov.in/citizen >என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 20ம் தேதி தொடங்கி வைத்தார். இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய ‘எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்’ நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் இணைய வழியிலேயே விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கும் குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும் நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம் ஆகியவற்றை < https://.eservices.tn.gov.in/ > என்ற இணையவழி சேவை மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் நிலஅளவரால் பதிவேற்றம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

The post அரசு திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு நிலம் அளவீடு செய்ய விண்ணப்பிக்க புதிய இணைய தளம் அறிமுகம் பொதுமக்கள் பயனடைய அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Tamil Nadu Revenue and Disaster Management Department ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டையில் தண்ணீரில் மூழ்கி சகோதரிகள் உயிரிழப்பு