×

பந்தலூரில் சிவில் சப்ளை குடோன் கட்டுவதற்கான இடம் ஆய்வு

பந்தலூர்: பந்தலூரில் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தை கடந்த 1998ம் ஆண்டு அரசு தாலுகாவாக அறிவித்தது. தாலுகா அலுவலகம் அரசு மருத்துவமனை கட்டிடத்தில் இயங்கி வந்தது. அதன்பின் அரசு தாலுகா அலுவலகத்திற்கு கட்டிடம் கட்டப்பட்டு தாலுகா அலுவலகம் அரசு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. சிவில் சப்ளை குடோன் கடந்த பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. போதிய வசதி இல்லாமல் இரு வேறு இடங்களில் சிவில் சப்ளை குடோன் இருந்து வருவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றது. இதனால், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிவில் சப்ளை குடோன் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.தொடர்ந்து, பந்தலூர் இரும்பு பாலம் செல்லும் வழியில் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்து சிவில் சப்ளை குடோன் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

 

The post பந்தலூரில் சிவில் சப்ளை குடோன் கட்டுவதற்கான இடம் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Pandalur ,Nilgiris district ,Bandalur circle ,Bandalur ,Dinakaran ,
× RELATED வெயில் ருத்ர தாண்டவம்: நீர் நிலைகளை தேடி அலையும் யானைகள் கூட்டம்