×

தேனி ஜிஹெச் மீது புகார்

ஆண்டிபட்டி: போடி அருகே உள்ள கொட்டக்குடி ஊராட்சியை சேர்ந்த குரங்கனியை அடுத்த மலைக்கிராமம் முதுவாக்குடி. இங்கு வசித்து வரும் வினோத் (27)-முருகேஸ்வரி (26) தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், மூன்றாவதாக ஏற்பட்ட 4 மாத கர்ப்பம் கருச்சிதைவு ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் நேற்று முன்தினம் காலை தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இந்நிலையில் அவரின் கணவர் வினோத், ஒன்றரை மணி நேரம் காக்க வைத்து, முருகேஸ்வரியை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றதாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மீது புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தேனி ஜிஹெச் மீது புகார் appeared first on Dinakaran.

Tags : Theni GH ,Antipatti ,Muduvakudi ,Kurangani ,Kottakudi Panchayat ,Bodi ,Vinod ,Murugeswari ,Dinakaran ,
× RELATED நிலங்கள் வளம்பெற கோடை உழவு அவசியம்