×

மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் மறைவு

புதுடெல்லி: உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரான பாலி நாரிமன் நேற்று காலமானார். அவருக்கு வயது 95. நாரிமன் கடந்த சில மாதங்களாக இதய பாதிப்பு உட்பட வயது மூப்பு காரணமாக பல்வேறு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவரது இறுதி சடங்குகள் டெல்லியில் இன்று நடைபெறுகின்றது. நாரிமன் தனது பணிக்காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு வழக்குகளை கையாண்டு கவனத்தை ஈர்த்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சார்பில் ஆஜரானவர். அவரது மறைவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் , தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் மறைவு appeared first on Dinakaran.

Tags : Polly Nariman ,New Delhi ,Supreme Court ,Pali Nariman ,Nariman ,Delhi ,
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்