×

போலி கால்சென்டர் மோசடி கொல்கத்தாவில் ஈடி சோதனை

கொல்கத்தா: போலி கால்சென்டர் மோசடி தொடர்பாக கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். மேற்கு வங்க மாநிலத்தில் இயங்கி வந்த மெட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் போலி கால்சென்டர் மூலமாக வெளிநாட்டினர் மற்றும் இந்தியர்களிடம் ரூ.1000 கோடி திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் பெனியாபுகூர் மற்றும் பாகுய்ஹாட்டி பகுதிகளில் உள்ள மெட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர்களின் கூட்டாளிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினார்கள். இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரி கூறுகையில்,‘‘இந்த பணம் எங்கிருந்து பறிக்கப்பட்டது, இவர்களது பங்கு என்ன என்பதை கண்டறிய முயற்சிக்கிறோம். பலகோடி ரூபாய் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஹவாலா தொடர்பு இருப்பதை நிராகரிக்க முடியாது” என்றார்.

The post போலி கால்சென்டர் மோசடி கொல்கத்தாவில் ஈடி சோதனை appeared first on Dinakaran.

Tags : ED ,Kolkata ,Med Technologies Private Limited ,West Bengal ,Dinakaran ,
× RELATED நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்...