×

கூட்டணிகளுக்கு 60 தொகுதிகள் தரமுடிவு ‘சீட்’ கிடைக்கலனா கோபப்படாதீங்க: தெலுங்கு தேசம் மூத்த நிர்வாகிகளிடம் சந்திரபாபு நாயுடு சமாதானம்

திருமலை: ஆந்திராவில் வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடக்க உள்ளது. ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியமைக்க தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு தீவிரம் காட்டி வருகிறார். மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகளும், 25 எம்பி தொகுதிகளும் உள்ளது. இவற்றில் கணிசமான இடங்களை பிடிக்க சந்திரபாபு தனது கட்சி மூத்த நிர்வாகிகளை அழைத்து அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார். இதேபோல் உண்டவல்லியில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் சந்திரபாபு பேசியதாவது:

வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அதிகளவில் வெற்றி பெற வேண்டும். மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும். மத்தியிலும் பங்கு இருக்க வேண்டும்.
இதனால் மொத்தமுள்ள தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு 50 முதல் 60 சட்டமன்ற தொகுதிகள் வரை கொடுக்க வேண்டி உள்ளது. எனவே, தற்போதுள்ள மூத்த நிர்வாகிகள் பலரும் ‘சீட்’ கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். அனைவருக்கும் ‘சீட்’ கொடுக்க முடியாது. அனைத்து நிர்வாகிகளும் பொறுமை காத்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ‘சீட்’ கிடைக்காதபட்சத்தில் யாரும் அதிருப்தியோ, கோபமோ அடையக்கூடாது. யாருக்கு ‘சீட்’ வழங்கினாலும் அவர்களது வெற்றிக்கு துணையாக இருக்க வேண்டும். ஆட்சிக்கு வந்த பிறகு ‘சீட்’ கிடைக்காதவர்களுக்கு கண்டிப்பாக பொறுப்புகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

The post கூட்டணிகளுக்கு 60 தொகுதிகள் தரமுடிவு ‘சீட்’ கிடைக்கலனா கோபப்படாதீங்க: தெலுங்கு தேசம் மூத்த நிர்வாகிகளிடம் சந்திரபாபு நாயுடு சமாதானம் appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,Telugu Desam ,Tirumala ,Andhra Pradesh ,Telugu Desam Party ,Chandrababu ,YSR Congress ,
× RELATED ஆந்திர தேர்தலில் 4 தொகுதியில் தெ.தே....