×

வார விடுமுறையை முன்னிட்டு பல்வேறு இடங்களுக்கு 840 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை அறிவிப்பு

சென்னை: பௌர்ணமி, வார விடுமுறையை முன்னிட்டு பல்வேறு இடங்களுக்கு 840 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. வண்டலூர் கிளாம்பாக்கத்தில் இருந்து 23ம் தேதி 730 பேருந்துகளும், 24ம் தேதி 640 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், குமரி, கோவைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது . கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூருவுக்கு 23ம் தேதி 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post வார விடுமுறையை முன்னிட்டு பல்வேறு இடங்களுக்கு 840 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Transport Department ,Poornami ,Vandalur Klambach ,Tiruvannamalai ,Trichy ,Kumbakonam ,Department ,Dinakaran ,
× RELATED சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நாளை...