×

நெல்லை – நாகர்கோவில் இடையே விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு..!!

நெல்லை: நெல்லை – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு மீட்கப்பட்டார். அரியலூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி நெல்லை-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து மீன் பொருட்களை ஏற்றி கொண்டு நெல்லை சென்ற மற்றொரு லாரி அங்கு நின்று இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில் லாரியின் முன்பகுதி சேதமான நிலையில் ஓட்டுநர் சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்தார். கங்கைகொண்டான் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து 10க்கும் மேற்பட்ட வீரர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணி மேற்கொண்டனர். லாரியின் பாகங்களை அதிநவீன இயந்திரங்கள் கொண்டு வெட்டி அகற்றி ஓட்டுநரை பத்திரமாக மீட்டனர். நெல்லை – நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post நெல்லை – நாகர்கோவில் இடையே விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Nellai ,Nagercoil ,Nellie – Nagercoil National Highway ,Ariyalur ,Nellai-Nagarkoil National Highway ,Nellai – Nagercoil ,Dinakaran ,
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!