×

திருவட்டார் அருகே மனைவி, பிள்ளைகளை துரத்தி விட்டு க.காதலியுடன் மாஜி ராணுவ வீரர் ‘ஜாலி’: விசாரிக்க சென்ற போலீசை துப்பாக்கி காட்டி மிரட்டியதால் பரபரப்பு

குலசேகரம்: திருவட்டார் அருகே மனைவி, பிள்ளைகளை துரத்திவிட்டு கள்ளக்காதலியுடன் ராணுவ வீரர் ஜாலியாக இருந்தார். விசாரிக்க சென்ற போலீசை துப்பாக்கி காட்டி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் 56 வயதான முதியவர், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 53 வயதில் மனைவி, மனவளர்ச்சி குன்றிய மகன், பார்வையற்ற மகன் என்று 2 பேர் உள்ளனர்.

ராணுவத்தில் ஓய்வு பெற்றதும் பல தொழில்களை செய்தார். குறிப்பாக தேன்பெட்டி தொழில் மூலம் நல்ல லாபம் ஈட்டினார். இதனால், தனது வீட்டின் அருகே புதிய வீடு ஒன்றையும் கட்டி வருகிறார். ஆகவே வருமானம், மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை. தொழில் சம்பந்தமாக சக மனிதர்களிடமும் ராணுவ வீரர் நன்றாக பழகியதால் நிறைய ஆள்பழக்கமும் கிடைத்தது. அப்படி அறிமுகமானவர்தான் மார்த்தாண்டம் அருகே வசித்து வரும் 50 வயது பெண். இந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். 3 பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. அதனால் இந்த பெண் தனியாக வசித்து வந்தார். தேன்பெட்டி தொழில் சம்பந்தமாக ராணுவ வீரர் அடிக்கடி இந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆரம்பத்தில் சாதாரணமாக பேச ஆரம்பித்த ராணுவ வீரர், ஒரு கட்டத்தில் அவரது வீட்டிலியே தங்கினார். தனிமையிலும் இருந்தார். நாளடைவில் பல இடங்களுக்கு செல்ல ஆரம்பித்தனர். இதனால் வீட்டுக்கு வருவது தாமதமானது. சில நேரங்களில் வீட்டுக்கு வருவதில்லை. இது மனைவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. விசாரணையில் கணவரின் கள்ளக்காதல் தெரியவந்தது. அதிர்ச்சியுடன் கேட்டபோது, ‘அவள்தான் எனக்கு வேண்டும், இஷ்டம் இருந்தால் நீ இரு, இல்லையேல் பிள்ளைகளுடன் போ’ என்று கடிந்து விட்டார். இருப்பினும் பிள்ளைகளுக்காக மனதை தேற்றி கொண்டார்.

இந்நிலையில், சில வாரத்துக்கு முன்பு கள்ளக்காதலியை பைக்கில் வீட்டுக்கு அழைத்து வந்தார் ராணுவ வீரர். இதைக்கண்டு மனைவி தட்டி கேட்டுள்ளார். பின்னர் ஒரு அறைக்கு சென்று அவருடன் ஜாலியாக இருந்தார். உடனே திருவட்டார் போலீசுக்கு மனைவி தகவல் அளித்தார். போலீசார் விரைந்து வந்து கதவை தட்டினர். வெளியே வந்த அவர், துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட்டுவிடுவதாக மிரட்டினார். அவரிடம் இருந்து லாவகமாக துப்பாக்கியை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் எச்சரித்து அனுப்பினர்.

இருப்பினும் மறுநாளே கள்ளக்காதலியின் வீட்டுக்கு அழைத்து வந்து ஜாலியாக இருந்தார். உடனே மனைவி ஆத்திரத்துடன் சத்தம் போட்டார். தகவலறிந்து மீண்டும் போலீசார், காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று எச்சரித்து அனுப்பினர். வெளியே வந்த ராணுவ வீரர், மனைவியை விட்டுவிட்டு கள்ளக்காதலியை பைக்கில் ஏற்றி கொண்டு வீட்டுக்கு சென்று ஜாலியாக இருந்தார். வீட்டுக்கு வந்ததும் ஆத்திரமடைந்த மனைவி, ஊர்மக்கள் உதவியுடன் கதவை தட்டினர். வெளியே வந்த ராணுவ வீரருக்கும், பொதுமக்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. போலீசார், மீண்டும் வந்து பேச்சுவார்த்தை நடத்தி கடுமையாக எச்சரித்தனர். கள்ளக்காதலியை துரத்தினர்.

The post திருவட்டார் அருகே மனைவி, பிள்ளைகளை துரத்தி விட்டு க.காதலியுடன் மாஜி ராணுவ வீரர் ‘ஜாலி’: விசாரிக்க சென்ற போலீசை துப்பாக்கி காட்டி மிரட்டியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvattar ,K. Kathali ,Kulasekaram ,Thiruvatar ,Thiruvattar ,Kanyakumari ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...