×

கோவை குண்டு வெடிப்பு தினம் குறித்து சர்ச்சை பதிவு: பாஜக நிர்வாகி போலீசில் விசாரணைக்காக ஆஜர்..!!

சென்னை : தமிழ்நாடு பாஜக தொழில்நுட்பப்பிரிவு துணைத்தலைவர் பி.எஸ்.செல்வகுமார் கோவை சைபர் கிரைம் போலீசில் ஆஜரானார். கோவை குண்டு வெடிப்பு தினம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் செல்வகுமார் சமூக வலைதளத்தில் கருத்து பகிர்ந்தார். கடந்த 17ம் தேதி பி.எஸ்.செல்வகுமார் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ள செல்வகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவை குண்டு வெடிப்பு தினம் குறித்து சர்ச்சை பதிவு: பாஜக நிர்வாகி போலீசில் விசாரணைக்காக ஆஜர்..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore blast day ,BJP ,Chennai ,Tamil Nadu ,vice president ,PS ,Selvakumar ,Coimbatore Cybercrime Police ,Coimbatore Bomb Blast Day ,Coimbatore ,day ,
× RELATED குடிநீர் பிரச்னையே வராதபடி கோதாவரி...