×

மார்ச்1ம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு துவக்கம் விடைத்தாள்களுடன் முகப்பு சீட்டு பொருத்தும் பணி

*அடிப்படை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க சிஇஓ உத்தரவு

பெரம்பலூர் : மார்ச் 1ம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. 35 தேர்வு மையங்களில் விடை த்தாள்களுடன் முகப்புச் சீட்டு பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. தேர்வு மையத்திற் கான அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க பெரம்பலூர் மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் உத்தரவிட்டார்.

தமிழக அளவில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு வரு கிற மார்ச் மாதம் 1ம்தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன்படி பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 1ம்தேதி வெள்ளிக்கிழமை தமிழ், 5ம் தேதி செவ்வாய்க் கிழமை ஆங்கி லம், 8ம் தேதி வெள்ளிக் கிழமை கம்ப்யூட்டர் சயின்ஸ், எத்திக்ஸ் அண்டு இண்டியன் கல்ச்சர், கம்ப் யூட்டர் அப்ளிகேஷன், பயோ கெமிஸ்ட்ரி, புள்ளி யியல்,அரசியல் அறிவியல், நர்சிங் ஒக்கேஷனல்- பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், 11ம்தேதி திங்கட் கிழமை வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்,

15ஆம் தேதி வெள்ளிக் கிழமை இயற்பியல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு திறன், கணினி தொழில் நுட்பம், 19ஆம் தேதி செவ் வாய்க் கிழமை கணிதம், வணிகவியல்,விலங்கியல், மைக்ரோ பயாலஜி, வேளாண் அறிவியல், நர் சிங்(பொது), நுண்ணுயிரி யல், டெக்ஸ்டைல் அண்டு டிரெஸ் டிசைனிங், நியூட்ரீ ஷியன் அண்டு டயடெடிஸ், ஃபுட் சர்வீஸ் அண்டு மேனே ஜ்மென்ட், 22ம்தேதி வெள்ளிக் கிழமை உயிரி யல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல், அலுவலக மேலாண்மை மற்றும் செயலாக்கம், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, பேசிக் ஆட் டோமொபைல் இன்ஜினி யரிங், பேசிக் எலெக்ட்ரா னிக் இன்ஜினியரிங், அலுவலக மேலாண்மை ஆகியப் பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகிறது.

பிளஸ்-2 பொதுத் தேர்வி னை பெரம்பலூர் மாவட்டத் தில், 41 அரசு மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 3,856 பேர், 2 ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 43பேர், 4 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 1,143 பேர், 8 சுயநி திப் பள்ளிகளைச் சேர்ந்த 388 பேர், 24 மெட்ரிக் பள்ளி களை சேர்ந்த 1,664 பேர் என மொத்தம் மாவட்ட அள வில் 79மேல்நிலைப் பள்ளி களைச் சேர்ந்த 3,558 மாண வர்கள், 3536 மாணவிகள் என மொத்தம் 7,094 பேர் 35 தேர்வு மையங்களில் பிளஸ்-2 பொதுத் தேர்வை எழுதுகின்றனர்.

இந்த தேர்வினையொட்டி தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் அமைக்கப் பட்டுள்ள 35 தேர்வு மையங் களிலும், தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிய ருக்கான விடைத் தாள்க ளில் முகப்பு சீட்டினை(டாப் ஷீட்) இணைக்கும் பணி கள் கடந்த சில தினங்களு க்கு முன்பு தொடங்கப்பட்டு நேற்றுடன் முடிவடைந்து உள்ளன. இதனைத் தொடர் ந்து 35 தேர்வு மையங்களை யும் அனைத்து அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிக ளுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளைப் போல அரசு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடிக்க வும் 100 சதவீத தேர்ச்சி விகிதத்தைஎட்டவும் அனை த்துவகை உயர்நிலை,மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் தீவிரமாகப் பணியாற்றி சிறந்த தேர்ச்சி விகிதத்தை மாவட்டத்திற்கு பெற்றுத் தந்து பெருமை சேர்க்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் அறிவுறுத் தியுள்ளார்.

The post மார்ச்1ம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு துவக்கம் விடைத்தாள்களுடன் முகப்பு சீட்டு பொருத்தும் பணி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...