×

திருப்பதி நகரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ரெய்டு 122 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

*கடைகளுக்கு ரூ.60,000 அபராதம் விதிப்பு

திருமலை : திருப்பதி மாநகராட்சி ஆணையர் அதிதி சிங் உத்தரவின் பேரில், மாநகராட்சி சுகாதார அலுவலர் யுவா அன்வேஷ் தலைமையில், துப்புரவு மேற்பார்வையாளர்கள் செஞ்சய்யா, கே.சுமதி, துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவுச் செயலர்களுடன் இணைந்து அந்தந்த வார்டுகளில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகள், சந்தைகள், ஓட்டல்கள், தெருவோர வியாபார கடைகளில் நேற்று சோதனை செய்தனர். இதில் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அப்போது 122 கிலோ எடையுள்ள ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக்குகள் மற்றும் 60 ஜிஎஸ் கீழ் உள்ள கேரி பேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைப்பற்றப்பட்ட 122 கிலோ பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதமாக ரூ.60,000 வசூலிக்கப்பட்டது. இனிமேல் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு உற்பத்தியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை கடைகள், பல்பொருள் அங்காடிகள், ஓட்டல்கள், தெருவோர வியாபாரிகள், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், 120 மைக்ரானுக்கு குறைவான கேரி பேக்குகள் தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ அல்லது விற்கவோ கூடாது.

மொத்த வியாபாரிகளிடம் ஆய்வின்போது பிடிப்பட்டால் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்தால் முதல்முறை ரூ.5000, இரண்டாவது முறை ரூ.15,000, மூன்றாவது முறை ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். சில்லரை வியாபாரிகளிடம் முதல் முறை விற்பனை செய்பவர்களுக்கு ரூ.1000, இரண்டாவது முறை ரூ.5,000, மூன்றாவது முறையாக ரூ.10,000 அதன் பிறகு வர்த்தக உரிமம் ரத்து செய்யப்பட்டு கடை மூடப்படும் என்று எச்சரித்தார்.

நுகர்வோர்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் மற்றும் கேரி பேக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பயனர்கள் விதிகளுக்கு எதிராக பயன்படுத்தினால், முதல் முறை ரூ.100 இரண்டாவது முறை ரூ.500, மூன்றாவது முறையாக ரூ.1000 அபராதம் மற்றும் அதன்பிறகு அவர்களின் வீடுகளுக்கு மாநகராட்சி வழங்கும் சேவைகள் நிறுத்தப்படும் என்று எச்சரித்தார்.

The post திருப்பதி நகரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ரெய்டு 122 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Tirupati Corporation ,Commissioner ,Aditi Singh ,Municipal Health Officer ,Yuva Anvesh ,Senjaiah ,K. Sumathi ,Dinakaran ,
× RELATED கோவிந்த நாமாவளி 10 லட்சத்து 1,116 முறை...