×

காட்பாடி அருகே மண்ணில் புதைந்த 17ம் நூற்றாண்டு நடுகல் மீட்பு

*அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

வேலூர் : காட்பாடி அருகே மண்ணில் புதைந்த 17ம் நூற்றாண்டு நடுகல் மீட்கப்பட்டு வேலூர் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கண்டிப்பேடு கிராமத்தை சேர்ந்த வினோத்குமாருக்கு சொந்தமான நிலத்தில் வரப்பு தோண்டிய போது, கற்சிலை இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி தாசில்தார் சரவணன், சம்பவ இடத்திற்கு சென்று கற்சிலையை பார்வையிட்டார். இதுதொடர்பாக, வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற காப்பாட்சியர் சரவணன், ஆய்வு செய்தபோது அந்த கற்சிலை 17ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் வகை சேர்ந்தது என்றும், 47 செ.மீ அகலமும், 62 செ.மீ உயரமும் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, காட்பாடி தாசில்தார் சரவணன், நடுகல்லை மீட்டு, வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். அங்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post காட்பாடி அருகே மண்ணில் புதைந்த 17ம் நூற்றாண்டு நடுகல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Nadu ,Katpadi ,Museum Vellore ,Vellore Museum ,Vinod Kumar ,Kandipedu ,Gadpadi ,Vellore district ,
× RELATED வேலூர் காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பால் மக்கள் அவதி