×

சென்னையில் 200 வார்டுகளிலும் மகளிருக்கென பிரத்யேக உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்படும் : மேயர் பிரியா அறிவிப்பு!!

சென்னை : சென்னையில் 200 வார்டுகளிலும் மகளிருக்கென பிரத்யேக உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்படும் என்று மேயர் பிரியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2024-25 நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். அதில் சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும், தொழிற்பயிற்சி நிலையத்தை மேம்படுத்த ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்படும், சென்னைப் பள்ளிகளில் உடனடி பழுது பார்க்கும் பணிக்கு ரூ.1.32 கோடி வழங்கப்படும், 255 பள்ளிகளுக்கு 7.64 கோடி ரூபாயில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

The post சென்னையில் 200 வார்டுகளிலும் மகளிருக்கென பிரத்யேக உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்படும் : மேயர் பிரியா அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mayor Priya ,Mayor ,Priya ,Chennai Municipal Corporation ,Chennai Corporation ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!