×

சமூக வலைதளங்களில் தனது பெயரில் அதிகாரப்பூர்வமாக கணக்கு தொடங்கினார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்!

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது பெயரில் புதிய சமூக வலைதள பக்கங்களை தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தொலைக்காட்சி, இணையதள ஊடகங்களுக்கும் மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று (21.02.2024) முதல் அதிகாரப்பூர்வமான முகநூல் பேஸ்புக் (Facebook), X தளம், இன்ஸ்டாகிராம், (Instagram) மற்றும் வாட்ஸ் அப் (WhatsApp Channels) போன்ற சமூகவலைதளங்களை தொடங்கி கட்சி ரீதியான அறிவிப்புகளும், மக்களுக்கான செய்திகளும், தனிப்பட்ட கருத்துக்கள் போன்ற முக்கிய செய்திகள் இந்த நான்கு சமூக ஊடகங்கள் வழியாக உங்களை வந்து அடையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலே குறிப்பிட்டுள்ள அதிகாரப்பூர்வமான முகநூல் பக்கத்தின் லிங்க் (Link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Premallatha Vijayakant (General Secretary – Desiya Murpokku Dravida Kazhagam) Official Social Media Links

*Twitter X: https://x.com/PremallathaDmdk?t=ajELDtyUff-iRQ3jgZd4mg&s=09

*Instagram: https://www.instagram.com/_premallathadmdk?igsh=NGdIOGJIYzh5a210

*FaceBook: https://www.facebook.com/profile.php?id=61556479832259&mibextid=ZbWKwL

The post சமூக வலைதளங்களில் தனது பெயரில் அதிகாரப்பூர்வமாக கணக்கு தொடங்கினார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்! appeared first on Dinakaran.

Tags : DMDK ,General Secretary ,Premalatha Vijayakanth ,CHENNAI ,National Progressive Dravida Kazhagam ,DMUDG ,
× RELATED ‘மருமகளே… மருமகளே… வா வா…’ பிரேமலதாவை வரவேற்ற செல்லூர் ராஜூ