×

வாலிபர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 4 பேருக்கு ஆயுள் சிறை

*மயிலாடுதுறை நீதிமன்றம் தீர்ப்பு

மயிலாடுதுறை : வாலிபர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.மயிலாடுதுறை அருகே பாலையூர் போலீஸ்சரகம் சின்னகொக்கூர் ஆர்ச்சித் தெருவை சேர்ந்தவர் சரவணன்(22). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (33), அவரது தம்பி ராமச்சந்திரன் (31) ஆகியோர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 16.2.2020 அன்று வீட்டில் இருந்த சரவணனிடம், செந்தில்குமார், ராமச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்களான ஆடுதுறையை சேர்ந்த மாதவன் (37), ரஞ்சித் (34) ஆகியோர் சேர்ந்து மீண்டும் தகராறு செய்துள்ளனர். இதில் 4 பேரும் சேர்ந்து சரவணனை கட்டையால் தாக்கியுள்ளனர்.

அப்போது செந்தில்குமார், ராமச்சந்திரன் ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரவணனை சரமாரி குத்தினர். இதில் சரவணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரன், செந்தில்குமார், மாதவன், ரஞ்சித் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவ்வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இவ்வழக்கு தொடர்பாக 19 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்ட நிலையில் நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட செந்தில்குமார், அவரது தம்பி ராமச்சந்திரன், இவர்களது நண்பர்களாக சிவக்குமார், ரஞ்சித் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, தலா ஆயிரத்து 500 அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு மாதகால சிறை தண்டனை விதித்து நீதிபதி ராஜவேலு தீர்ப்பு வழங்கினார். அரசு தரப்பில் வக்கீல் ராமசேயோன் ஆஜரானார்.

The post வாலிபர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 4 பேருக்கு ஆயுள் சிறை appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Mayiladuthurai court ,Saravanan ,Archith Street Chinnakokur ,
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...