×

நம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் தமிழ்மொழியை பயன்பாட்டு மொழியாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்: டிடிவி தினகரன்

சென்னை: “நம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் தமிழ்மொழியை பயன்பாட்டு மொழியாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்” என உலக தாய்மொழித் தினத்தையொட்டி டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “மொழிகள் பல இருப்பினும் தாய்மொழி எனும் உளியால் மட்டுமே சிந்தனை எனும் சிற்பத்தை செதுக்கி ஒருவரின் அறிவாற்றலை பெருக்க முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தும் உலக தாய்மொழிகள் தினம் இன்று.

தாய்மொழியாம் தமிழ் மொழியை காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளை நினைவில் கொள்வதோடு, நம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் தமிழ்மொழியை பயன்பாட்டு மொழியாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்” என டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

The post நம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் தமிழ்மொழியை பயன்பாட்டு மொழியாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்: டிடிவி தினகரன் appeared first on Dinakaran.

Tags : TTV Dhinakaran ,CHENNAI ,World Mother Language Day ,DTV ,
× RELATED தேனி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு...