×

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம், பிப்.21: சேலம் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட சேலம் மேற்கு கோட்ட மின் நுகர்வோர்களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் இன்று (21ம் தேதி) காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரையில் சேலம் அன்னதானப்பட்டி சங்ககிரி மெயின் ரோட்டில் உள்ள மேற்கு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் தண்டபாணி கலந்துகொண்டு, குறைகளை கேட்டறிகிறார். அதனால், சேலம் மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் நேரில் வந்திருந்து மின்சாரம் தொடர்பான குறைகள் இருந்தால், அதனை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இத்தகவலை வாழப்பாடி செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.

The post மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem West Division ,Salem Power Distribution Circle ,Salem Annadhanapatti Sangakiri ,Dinakaran ,
× RELATED தள்ளாத வயதிலும் கவனம் ஈர்த்த தலையாய...