×

₹61 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல், பிப்.21: நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹61.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல் வேளா ண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2460 மூட்டை பருத்தியை கொண்டு வந்தனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். கூட்டுறவு சங்க அலுவலர்கள் விவசாயிகள் முன்னிலையில் பருத்தி ஏலம் நடத்தினர். இதில் ஆர்சிஎச் ரகம் ஒரு குவிண்டால் ₹7469 வரையும், மட்ட ரகம் ₹6399 வரை ஏலம் போனது. மொத்தம் ₹61.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

The post ₹61 லட்சத்துக்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal Cooperative Society ,Namakkal Agricultural Producers Cooperative Sales Association ,
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை