×

பெற்றோர் எதிர்ப்பால் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

திருவாடானை: திருவாடானை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தனர். திருவாடானை அருகே பாரதி நகர் பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் கணேஷ்(29). விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா அய்யம்பட்டி கிழக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகள் வளர்மதி(24). இருவரும் சென்னையில் வேலை பார்த்தபோது கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வளர்மதி பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் காதல் ஜோடி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2 தினங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை பகுதியில் உள்ள ஒய்யவந்தான் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்களால் தங்களுக்கு ஆபத்து உள்ளதாகக் கூறி பாதுகாப்பு வழங்கக் கேட்டு நேற்று திருவாடானை காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

The post பெற்றோர் எதிர்ப்பால் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Thiruvadanai police station ,Manokaran ,Ganesh ,Bharati Nagar ,Thiruvadan ,Muniyasamy ,Varamathi ,East Street ,Chatur taluka, ,Ayyambatti, Virudhunagar district.… ,Dinakaran ,
× RELATED திருவாடானை அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்