×

போதையில் வாலிபர் தற்கொலை விளையாட்டிற்கான உபகரணங்கள் பொருத்தும் பணி அட்டப்பாடி கோட்டத்தரையில் அரசு மருத்துவமனைக்கு புதிய ஆம்புலன்ஸ்

பாலக்காடு: அட்டப்பாடி கோட்டத்தரையில் அமைந்துள்ள அரசு டிரைபல் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு கேரள என்.ஜி யூனியன் 75 -ம் ஆண்டு மாநில மாநாட்டின் சார்பில் புதிய ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது. கோட்டத்தரை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ வக்கீல் சாந்தகுமாரி, டி.எம்.ஓ டாக்டர் வித்யாவிடம் புதிய ஆம்புலன்சின் தாக்கோல் வழங்கினார். இதனால் நோயாளிகளும், அட்டப்பாடி மலைவாழ் மக்களும் பயன் பெறுவர். வாகனப்போக்குவரத்து இல்லாத கிராம மக்களுக்கு பெரிதும் உதவியாக அமைந்துள்ளது. கர்ப்பிணிகளுக்கும், விபத்துகள் நேர்ந்தாலும் ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லாமல் பல்வேறு தருணங்களில் உயிரிழப்புகள் நேர்ந்துள்ளதாக எம்.எல்.ஏ., சாந்தகுமாரி தெரிவித்தார்.

The post போதையில் வாலிபர் தற்கொலை விளையாட்டிற்கான உபகரணங்கள் பொருத்தும் பணி அட்டப்பாடி கோட்டத்தரையில் அரசு மருத்துவமனைக்கு புதிய ஆம்புலன்ஸ் appeared first on Dinakaran.

Tags : Govt Hospital ,Attappadi Kotattarayi ,Government Tribal Specialty Hospital ,Attappadi Kotattarai ,Kerala NG Union 75th Annual State Conference ,Kotattarai Hospital ,MLA ,Advocate ,Shanthakumari ,DMO ,Dr. ,Vidya ,
× RELATED கமுதி அருகே பழைய கட்டிடத்தில் இயங்கும் மின்வாரிய அலுவலகம்