×

பழுதடைந்த சாலையில் சிக்கிய லாரி-பரபரப்பு

ஈரோடு: ஈரோடு, செங்கோடம்பாளையம், டெலிகாம்சிட்டி, 2வது வீதியில் பல ஆண்டுகளாக சாலை பழுதடைந்திருந்தது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அப்பகுதியில் புதிய தார் சாலை போடப்பட்டது. ஆனால், சில நாள்களுக்கு முன்னர், சாலையின் நடுவில் திடீரென பள்ளம் உருவானது. அந்த பள்ளத்தை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இதுவரை தார்சாலை அமைக்கப்படவில்லை. இந்த நிலையில், நேற்று மாலையில் கற்கள் பாரம் ஏற்றி வந்த லாரியின் பின்சக்கரம் சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளத்தில் சிக்கியது. இதனால் லாரியை நகர்த்த முடியவில்லை. அதன்பின்னர், மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு, அதில் கற்கள் ஏற்றி அனுப்பி வைத்தனர். அதன்பின்னர், பள்ளத்தில் சிக்கிய லாரியை மீட்டனர்.

The post பழுதடைந்த சாலையில் சிக்கிய லாரி-பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Sengodampalayam ,Telecomcity ,2nd Road ,Dinakaran ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...