×

சண்டிகர் மேயர் தேர்தல் தீர்ப்பு நீதிக்கும் சட்டத்துக்குமான ஒளிவிளக்காக அமைந்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

சென்னை: சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு, நீதிக்கும் இம்மண்ணின் சட்டத்துக்குமான ஒளிவிளக்காக அமைந்துள்ளது என்று திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு: சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பானது நீதிக்கும் இம்மண்ணின் சட்டத்துக்குமான ஒளிவிளக்காக அமைந்துள்ளது. அரசியல் சட்டப்பிரிவு 142-ன்கீழ் தனக்குள்ள அரிதினும் அரிதான அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், நியாயத்தை நிலை நாட்டியுள்ளதுடன் தேர்தல் அதிகாரியின் தில்லுமுல்லு செயலையும் உறுதியாக நிராகரித்துள்ளது. 2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேர்மைக்கும் மக்களாட்சித் தத்துவங்களுக்குமான இந்த வெற்றி இந்திய ஜனநாயகத்தின் வலுவான செய்தியை எடுத்துரைப்பதோடு, பாஜவின் தகிடுதத்தங்களுக்கு தக்க எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

The post சண்டிகர் மேயர் தேர்தல் தீர்ப்பு நீதிக்கும் சட்டத்துக்குமான ஒளிவிளக்காக அமைந்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு appeared first on Dinakaran.

Tags : Chandigarh ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,DMK ,President ,Supreme Court ,M.K.Stal ,
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்