×

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு டிஎன்பிஎஸ்சி மூலம் 213 பேர் தேர்வு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு டிஎன்பிஎஸ்சி மூலம் 213 பேர் இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் வாயிலாக தேர்தெடுக்கப்பட்ட 63 உதவி பொறியாளர்கள், 2 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 3 பண வசூலாளர்களுக்கு பணியிட ஆணைகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஏழை எளிய மக்களுக்காக அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியினை எவ்வித தொய்வும் இன்றி மேற்கொள்வதற்காக புதிதாக நியமிக்கப்பட்ட உதவி பொறியாளர்கள் தங்கள் கடமை உணர்ந்து பணியாற்ற வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் மூலம் வாரியத்திற்கு 64 இளநிலை உதவியாளர் , 68 பணவசூலாளர்கள், 7 சுருக்கெழுத்து தட்டச்சர் , 11 சமுதாய அலுவலர் மற்றும் 63 உதவி பொறியாளர்கள் என இதுவரை 213 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் சமயமூர்த்தி, வாரிய மேலாண்மை இயக்குநர் பிரபாகர், வாரிய தலைமைப் பொறியாளர்கள் சண்முகசுந்தரம், மைகேல் ஜார்ஜ், வாரிய செயலாளர் துர்காமூர்த்தி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு டிஎன்பிஎஸ்சி மூலம் 213 பேர் தேர்வு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Urban Habitat Development Board ,TNPSC ,Minister Thamo Anparasan ,CHENNAI ,Tamil Nadu Government Staff Selection Board ,
× RELATED தென்சென்னை தொகுதியில்...