×

போக்குவரத்து தொழிலாளர் கோரிக்கை பற்றி தொழிற்சங்கங்கள்-அதிகாரிகள் இன்று 6ம் கட்ட பேச்சுவார்த்தை

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக, இணை ஆணையர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே இன்று 6வது கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பழைய ஓய்வுதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்த வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கின. இதுதொடர்பாக ஏற்கவே 5 கட்ட பேச்சு வார்த்தை நடந்துள்ளது. இதையடுத்து 6ம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று மாலை 3 மணியளவில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து துறை அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொள்ள தொழிலாளர் தனி இணை ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்.

The post போக்குவரத்து தொழிலாளர் கோரிக்கை பற்றி தொழிற்சங்கங்கள்-அதிகாரிகள் இன்று 6ம் கட்ட பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Trade Unions ,CHENNAI ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...