×

காங்கிரசில் சேர்ந்த ஒரே மாதத்தில் ஒய்எஸ்ஆர் கட்சிக்கு திரும்பிய எம்எல்ஏ: சந்திரபாபுவின் நலனுக்காக செயல்படுவதாக ஷர்மிளா மீது குற்றச்சாட்டு

திருமலை: ஷர்மிளாவை நம்பி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஒரே மாதத்தில் எம்எல்ஏ ஆலா ராமகிருஷ்ணன் மீண்டும் ஒய்எஸ்ஆர் கட்சியில் இணைந்தார். அப்போது சந்திரபாபுவின் நலனுக்காக ஷர்மிளா செயல்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார். ஆந்திர அரசியலில் தேர்தல் நெருங்கி வரக்கூடிய நிலையில் எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆந்திர முதல்வராக உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா காங்கிரசில் சேர்ந்து கட்சியின் மாநில தலைவரானாார். இதன் பிறகு பல்வேறு கட்சியில் இருந்தும் காங்கிரஸ் கட்சிக்கு பல தலைவர்கள் இடம்பெயர்ந்தனர். அவர்களில் முதல் ஆளாக மங்களகிரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ஆலா ராமகிருஷ்ணன் முதலில் சேர்ந்தார். முதல்வர் ஜெகன் மோகனுக்கு நெருக்கமாக இருந்த ராமகிருஷ்ணா தனிப்பட்ட அதிருப்தியால், அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரசில் சேர்ந்தார். சர்மிளாவுடன் இணைந்து செயல்பட இருந்த ராமகிருஷ்ணா ஒரு மாதத்திலேயே முதல்வர் ஜெகன் மோகனை நேற்று சந்தித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். சந்திரபாபு மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் நலன்களுக்காக சர்மிளா செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஒரு மாதத்திலேயே அங்கிருந்து விலகி ஒய்.எஸ்.ஆர் காங்கிரசுக்கு எம்எல்ஏ ஒருவர் திரும்பியது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post காங்கிரசில் சேர்ந்த ஒரே மாதத்தில் ஒய்எஸ்ஆர் கட்சிக்கு திரும்பிய எம்எல்ஏ: சந்திரபாபுவின் நலனுக்காக செயல்படுவதாக ஷர்மிளா மீது குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : MLA ,YSR ,Congress ,Sharmila ,Chandrababu ,Tirumala ,Ala Ramakrishnan ,YSRCP ,Andhra ,Dinakaran ,
× RELATED விவசாயி டிராக்டரை எரித்த தெலுங்கு தேசம் கட்சியினர்