×

பாஜகவின் கோரப்பிடியில் இருந்து ஜனநாயகம் மீட்பு.. சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு!!

டெல்லி: பாஜகவின் தேர்தல் சூழ்ச்சிகளில் இருந்து ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சண்டிகரில் புதிதாக தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை. அனைத்து வாக்குச்சீட்டுகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பதிவான 8 ஓட்டுகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்த ஓட்டுக்கள் அனைத்தும் செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குல்தீப் குமார் சண்டிகர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கூறியதாவது;

ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: கார்கே
பாஜகவின் தேர்தல் சூழ்ச்சிகளில் இருந்து ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வரவேற்பு அளித்துள்ளார்.

“பாஜகவின் கோரப்பிடியில் இருந்து ஜனநாயகம் மீட்பு”: கார்கே
பாஜகவின் கோரப் பிடியில் இருந்து ஜனநாயகத்தை உச்சநீதிமன்றம் காப்பாற்றி உள்ளது என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டம் மீதான தாக்குதலுக்கு எதிராக இந்தியர்கள் அனைவரும் போராட வேண்டும். சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்த தில்லுமுல்லு, மோடி, அமித் ஷாவின் சதிச் செயல்களுக்கு சிறு உதாரணமே என்றார்.

பாஜகவின் ஜனநாயக படுகொலை: ராகுல் காந்தி
சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்த தில்லுமுல்லுவின் பின்னணியில் பிரதமர் மோடி உள்ளதாக ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவின் ஜனநாயக படுகொலை, உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் வெளிவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பாஜகவின் இரட்டை வேடம் அம்பலம்: ஆம் ஆத்மி
உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் பாஜகவின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சிக்கலான நேரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. பாஜக மட்டுமின்றி ஒன்றிய அரசின் செயல்பாட்டையும் உச்சநீதிமன்ற தீர்ப்பு அம்பலப்படுத்தி உள்ளது. சாதாரண மேயர் தேர்தலிலேயே தில்லுமுல்லு செய்யும் பாஜக, எம்.பி. தேர்தலில் என்னென்ன தில்லுமுல்லு செய்யும் எதிர்க்கட்சிகள் என்று அவர் கூறியுள்ளார்.

The post பாஜகவின் கோரப்பிடியில் இருந்து ஜனநாயகம் மீட்பு.. சண்டிகர் மேயர் தேர்தல் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Supreme Court ,Chandigarh ,Delhi ,Kang. ,Mallikarjuna Karke ,Yes Atmi Party ,Dinakaran ,
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...