×

கர்நாடகாவில் தேர்வு பயத்தில் 6வது மாடியிலிருந்து மாணவர் குதிக்கும் வீடியோ வெளியீடு: போலீசார் விசாரணை

கர்நாடகா: கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் தேர்வு பயத்தில் கல்லூரியின் 6 வது மாடியிலிருந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று 6வது மாடியிலிருந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட காட்சி மற்றொரு புறத்திலிருந்து செல்போனில் எடுக்கப்பட்டுள்ளது தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பின்னர் இதற்கான விசாரணையை போலீசார் துவக்கி உண்மையான காரணத்தை கண்டறிந்துள்ளனர்.

பீகாரை சேர்ந்த சத்தியம் சுமன் (20) என்ற மாணவர் உடுப்பியிலுள்ள மணிப்பால் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு தேர்வுகள் நடந்து உள்ளன. அந்த தேர்வின் போது முறைகேட்டில் சத்தியம் சுமன் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக கல்லூரி நிர்வாகம் அதை கண்டுபிடித்து அவரை சகமாணவர்கள் முன்னிலையில் தேர்வு அறையிலிருந்து வெளியேற்றியது. இதனால் அவர் அவமானமாக கருத்தியிருக்கிறார். இந்த நிலை தொடர்ந்தால் தேர்வில் தேர்ச்சி பெறமாட்டோம். பெற்றோரிடம் இருந்து தனக்கு திட்டுகளை வாங்கி தரும் என்ற நோக்கில் அவர் தற்கொலை முடிவை எடுத்திருப்பதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் தற்கொலை குறித்து கடிதம் எழுதி வைத்திருக்கின்றாரா என்பதை குறித்தும் அவரது நண்பர்களிடமும் போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவரின் தற்கொலைக்கு காரணம் தேர்வு பயம் மட்டுமா அல்லது வேறேதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேலும் மாணவர் மாடியிலிருந்து குதித்திருக்கும் வீடியோ காட்சியானது அங்கிருக்கக்கூடிய சக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் தேர்வு பயத்தில் இதுபோன்று தற்கொலை முடிவுகளையோ அல்லது வேறேனும் விபரீத முடிவுகளை எடுக்க கூடாது என அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கல்லூரி மாணவர் 6வது மாடியிலிருந்து தேர்வு பயத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கும் விவகாரமானது மிக பெரிய சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

 

The post கர்நாடகாவில் தேர்வு பயத்தில் 6வது மாடியிலிருந்து மாணவர் குதிக்கும் வீடியோ வெளியீடு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Udupi district ,Dinakaran ,
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!