×

லடாக்கில் நேற்றிரவு நிலநடுக்கம்

கார்கில்: லடாக் யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட கார்கில் மாவட்டத்தில் நேற்றிரவு 9.21 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பொது மக்கள் அச்சமடைந்தனர். ஆனால் எவருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.

இந்த நிலநடுக்கமானது 5.2 ரிக்டர் அளவில் பதிவானதாகவும், நிலநடுக்கத்தின் மையம் கார்கிலுக்கு வடமேற்கே 148 கிமீ தொலைவில் இருந்ததாகவும், நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாகவும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

The post லடாக்கில் நேற்றிரவு நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Earthquake ,Ladakh ,Kargil ,Union Territory of Ladakh ,Dinakaran ,
× RELATED லடாக்கில் லேசான நிலநடுக்கம்