×

கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலம் செராய்கேலா மாவட்டம் கார்ஸ்வான் பகுதியை சேர்ந்த பூஜா மஹதோ (32) என்ற பெண்ணுக்கு கோமல் குமாரி (9), அனன்யா மஹதோ (5), ஆர்யன் மஹதோ (1) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று வருவதாக, அவரது கணவரிடம் பூஜா மஹதோ கூறினார். இதனால் கணவன் – மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையே அந்த பெண்ணின் கணவர் வேலைக்காக ராஞ்சிக்கு சென்றுவிட்டார். வீட்டில் 3 குழந்தைகளுடன் இருந்த பூஜா மஹதோ, மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். பின்னர் தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, அப்பகுதியில் இருந்த கிணற்றில் 3 குழந்தைகளையும் தூக்கி வீசிக் கொன்றுவிட்டு, தானும் அந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையறிந்த அப்பகுதியினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மீட்புப் படையின் உதவியுடன் கிணற்றில் மூழ்கிய 3 குழந்தைகள், பூஜா மஹதோ ஆகியோரின் சடலங்களை மீட்டனர். நான்கு பேரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அந்தப் பெண்ணின் கணவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

The post கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Ranchi ,Pooja Mahato ,Karswan ,Seraikela ,Jharkhand ,Komal Kumari ,Ananya Mahato ,Aryan Mahato ,
× RELATED இந்தியா கூட்டணியில் இருந்து விலகாததால் சோரன் கைது: கார்கே பேச்சு