×

ஹைதராபாத்தில் திருமணத்திற்கு முன்பு சிரிப்பை சரிசெய்ய ‘ஸ்மைல் டிசைனிங்’ அறுவை சிகிச்சை செய்த வாலிபர் உயிரிழப்பு

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் திருமணத்தை முன்னிட்டு தனது சிரிப்பை சரிசெய்ய ‘ஸ்மைல் டிசைனிங்’ அறுவை சிகிச்சை செய்த லக்ஷ்மி நாராயணா(28) என்ற மணமகன் பரிதாபமாக உயிரிழந்தார். திருமணத்திற்கு ஒரு வாரம் இருந்த நிலையில் உயிரிழந்ததால் உறவினர்கள் சோகம் அடைந்துள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணா. 28 வயதான இவர் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அடுத்த வாரம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதனிடையே, லட்சுமி நாராயணாவுக்கு தான் சிரித்தால் வாய் அமைப்பு அசிங்கமாக இருப்பதாக ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்துள்ளது.

இதனால் திருமணத்திற்கு முன்பு இதை சரிசெய்ய வேண்டும் என நினைத்த அவர், ஹைதராபதாத்தில் உள்ள எப்எம்எஸ் பல் மருத்துவமனையை தேர்ந்தெடுத்து இருக்கிறார். அங்கு மருத்துவரையும் சிரிப்பை மேம்படுத்துதல் அறுவை சிகிச்சைக்கும் (Smile Enhance Surgery) தேதி குறிக்கப்பட்டு விட்டது.

அதன்படி, இரு தினங்களுக்கு முன்பு தனது பெற்றோருக்கு தெரிவிக்காமலேயே அறுவை சிகிச்சைக்கு சென்றிருக்கிறார் லட்சுமி நாராயணா. அப்போது அவருக்கு மயக்க மருத்து செலுத்தப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை முடிந்து சில மணிநேரங்கள் ஆகியும் லட்சுமி நாராயணாவுக்கு விழித்துக் கொள்ளவில்லை. இதையடுத்து, அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

பின்னர் இதுகுறித்து லட்சுமி நாராயணாவின் பெற்றோருக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்தது. இதையடுத்து, பதறி போய் அங்கு சென்ற அவரது பெற்றோர் தங்கள் மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். முதல்கட்ட விசாரணையில், அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததே அவரது மரணத்திற்கு காரணம் எனத் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து லட்சுமி நாராயாணாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அந்த மருத்துவமனை நிர்வாகம் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

The post ஹைதராபாத்தில் திருமணத்திற்கு முன்பு சிரிப்பை சரிசெய்ய ‘ஸ்மைல் டிசைனிங்’ அறுவை சிகிச்சை செய்த வாலிபர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : HYDERABAD ,Laxmi Narayana ,Lakshmi ,
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்