சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் 5 மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பானை சின்னம் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; டாளுமன்றத்தேர்தலில் பானை சின்னம் ஒதுக்க கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளோம். கடந்த சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் பானை சின்னத்தில் போட்டியிட்டதால் அதனை வழங்க கோரினோம்.
நாடாளுமன்ற தேர்தலில் 5 மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் ஆளுங்கட்சியினரின் தலையீடுகள் இருப்பதுபோல் தெரிகிறது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்படி திமுக நெருக்கடி எதுவும் கொடுக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் பொது தொகுதி ஒன்றை ஒதுக்கும்படி திமுக-விடம் கேட்டுள்ளோம் என்று கூறினார்.
The post உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்படி திமுக நெருக்கடி எதுவும் கொடுக்கவில்லை: திருமாவளவன் விளக்கம் appeared first on Dinakaran.