×

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் பேரணி

ராமேஸ்வரம்: இலங்கை அரசு, ஒன்றிய அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 2 பேருக்கு 6 மாத சிறை, மேலும் ஒரு மீனவருக்கு இலங்கை ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிப்பை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். படகுகளில் கருப்புக்கொடி கட்டி 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து பேரணியாக சென்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அடையாள அட்டைகளை ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். மீனவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஒன்றிய அரசு, இலங்கை அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் பேரணி appeared first on Dinakaran.

Tags : Fishermen rally ,Rameshwaram fishing ,port ,RAMESWARAM ,SRI LANKA ,UNION GOVERNMENT ,Rameshwaram ,Sri Lanka Navy ,Rameshwaram Fishing Port ,Dinakaran ,
× RELATED புதுச்சேரிக்கு மாற்றம் தேவை என்பதை...